Pages

23 June 2009

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம்

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 9500099100 என்ற செல்போன் நம்பருக்கு பொதுமக்கள் புகார்களை அனுப்பலாம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டது. நேற்று முதல் நாளே பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. நேற்று காலையில் இருந்து மாலை வரை சுமார் 60 புகார்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வந்தன.

இந்த புகார்கள் தானாக கம்ப்யுட்டரில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார்கள் அடுத்தகட்டமாக உதவி கமிஷனர்களுக்கும், துணை கமிஷனர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

எஸ்.எம்.எஸ். புகார்களை உடனடியாக பார்த்து உரிய நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. எஸ்.எம்.எஸ். புகார்களை கண்காணிக்க உதவி கமிஷனர் பாலச்சந்திரன் தலைமையில், பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய புகார்களை ஆய்வு செய்தபோது பெண்கள் அதிகளவில் புகார்கள் அனுப்பியது தெரிய வந்தது.

No comments:

Post a Comment