08 June 2009

ராஜபக்சே காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான் - சீமான் ஆவேசம்.


ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறீலங்கா அரசு, சீனமும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப்பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.
இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது. இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப் பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான், இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அறுகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, அய்.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சே வுடன் கை குலுக்குவானா? வழக்கை முடிக்க டெத் சர்டிபிகேட் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோணி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வோட்டு கேட்கிறான்…

ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?
இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??


மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது. பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது.

இப்போது புரிந்து கொள்ளுங்கள்…

தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறீலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்சே காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்சே தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே! என வேதனையோடு குறிப்பிட்டார்.

சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திடல் எங்கும் தேசியத் தலைவரின் படங்களும்,ஈழத்தின் மனித பேரவலத்தை விளக்கும் பதாகைகளும் நிரம்ப இருந்தன.
ராஜபக் சே உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீயூட்டப்பட்டது.

சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கவயல் தமிழர் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் சார்பில்,தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும்… கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் நாளிதழ் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இதே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினால்,அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதில்,தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதும், திமுகவின் அடுத்த சர்வாதிகாரி யார்? என அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுச்சிகரமாக நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஏராளமான கன்னடர்களும் கலந்து கொண்டனர். மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

நன்றி:மீனகம்

No comments:

Post a Comment