Pages

03 June 2009

86-வது பிறந்த நாள் காணும் கலைஞர்


முதல்-அமைச்சர் கருணாநிதியின் 86-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெறுகிறார்.

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டி பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும். இந்த திட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும். 3-ந் தேதி (இன்று) காலை 6 மணி முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு விழா நடத்தி துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் சார்பில், பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment