Pages

25 May 2009

DLF IPL T20 கிரிக்கெட் 2009 டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தரப்பில் அந்த அணி கேப்டன் கும்பிளே அபாரமாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். வினய்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் வீழ்ந்த வண்ணம் இருந்தன. எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ராபின் உத்தப்பா, ஆர்.பி.சிங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது.

20 ஓவர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுத்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது. சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடந்த ஆண்டு கடைசி இடம் பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment