Pages

02 May 2009

தமிழ் இனத்தைக் காக்கவே உயிரோடு இருக்கிறேன்: கலைஞர்


தமிழர்களுக்கோ, தமிழுக்கோ ஆபத்து என்றால் காப்பாற்றவே இயற்கை என்னை இதுவரை உயிரோடு வைத்துள்ளது,'' என்று திருச்சியில் நேற்றிரவு நடந்த மேதினம் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

மேலும் மதநல்லிணக்க, மதசார்பற்ற அரசு அமைக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு காங்கிரஸ், கட்சியுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட்டுள்ளோம். டில்லியில் அமைகிற அரசு எம்மதத்தையும் சாராத, எம்மதத்தையும் ஆதரிக்காத அரசாக அமையவேண்டும். மதசார்பற்ற அரசு அமைந்து அது மதநல்லிணக்கத்தை உருவாக்கிற அரசாக செயல்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.

எனக்கு முதுகில் ஆப்பரேஷன் செய்யும் முன் டாக்டர்கள், ஒன்று ஆபரேஷன் வெற்றி; மற்றொன்று ஆயுள் முடிவு என்றனர். அதனால் ஆப்பரேஷனுக்கு என்னுடைய குடும்பத்தார் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், நான் தான் தினம், தினம் வலியால் அவதிப்படுவதை விட ஆப்பரேஷனே மேல் என்று கூறி ஆபரேஷன் செய்து கொண்டேன்.

இங்கு (திருச்சி) எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் இப்போது இல்லை. நான் மட்டும் தான் இருக்கிறேன். ஏன் இருக்கிறேன்? தமிழர்களுக்கோ, தமிழுக்கோ ஆபத்து என்றால் அதைக் காக்கவே இயற்கை என்னை வைத்துள்ளது என்று நினைக்கிறேன். முதுகு தண்டு ஆப்பரேஷனுக்கு பிறகு மீண்டும் கோளாறு வந்தால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் கூறினர். இருப்பது ஒரு உயிர். அது மக்களுக்காக, நல்லகாரியத்துக்கு போகட்டும் என்று நினைத்துத் தான் திருச்சி வந்துள்ளேன். தமிழர்களை, தமிழை, தமிழ் இனத்தைக் காக்க வேண்டும். அண்ணாத் துரை என்னை பார்த்துச் சொன்னார், "நன்றாக படி' என்று, அவர் சொன்னதை நான் செய்யாதது, "நன்றாக படி' என்பதை மட்டும் தான். அதை விட்டு விட்டு நன்றாக இந்த கட்சிக்கு உழைத்தேன். உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை வளர்த்த அண்ணாத்துரை இன்று இல்லை என்பது எனக்கு பெரிய சோகம். அவர் இருந்திருந்தால் எனக்கு இன்னும் நிறைய கற்றுக் கொடுத்திருப்பார்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை திருச்சியில் 1970ம் ஆண்டு நடந்த மாநாட்டில் நான் தான் முழங்கினேன். அந்த முழக்கங்கள் வெற்றி பெற நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். நம்முடைய போராட்டங்களை பற்றி, செயல்பாடுகளை பற்றி மாற்றுக்கட்சிகாரர்கள், எதிர்க்கட்சிக்காரர் வசை பாடுகின்றனர். என்னைத் திட்டி, எனது குடும்பத்தை பற்றி, குழந்தைகளை பற்றி, பெண்டு பிள்ளைகளைப்பற்றி, உடன் இருப்போர் பற்றி எதிர்க்கட்சியினர் வசை பாடுகின்றனர். ஆனால், நான் உங்களால் புகழப்படுகிறேன். எதிரிகளே, மாற்றுக் கட்சி நண்பர்களே நன்றாக திட்டுங்கள், நன்றாக வசைபாடுங்கள். அது என்னையும், என்னுடன் உள்ளவர்களை எரு போன்று வளர்க்க உதவும். என்னை புகழ்ந்தவர்கள் இன்று என்னை ஏசிக் கொண்டிருக்கிறார்கள். அருமை நண்பர் டாக்டர் ராமதாஸ், "நாடகமாடுகிறேன்' என்று கூறுகிறார். ஆமாம், நான் சிறுவயதில் அண்ணாதுரையுடன் இணைந்து மேடைபோட்டு சமுதாய வளர்ச்சிக்காக பல நாடகங்கள் நடத்தியுள்ளேன். ஆனால், ராமதாஸ் குடும்பத்துக்காகவும், வருமானத்துக்காகவும் நாடகமாடி வருகிறார்.நாம் எல்லாம் இனத்தால் தமிழர்கள். மொழியால் தமிழ் உணர்வு மிக்கவர்கள். நாட்டால் இந்தியர்கள். மாநிலத்தின் மானம்காக்க என் இன்னுயிரையும் தர தயாராக இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

3 comments:

Anonymous said...

சு யப்பா என்னக்கு இப்பவே கண்ண கட்டுதே ........

Anonymous said...

நாயே நீ இன்னுமா திருந்தவில்லை மஹிந்த ராஜபக்சேயிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்? கனிமொழிக்கு ஒரு சிங்களவனை மணமுடித்துவைப்பதுதானே ஏற்கனவே அவள் வாழாவெட்டியாகத் தானே இருக்கின்றாள்.

பிலாவடிகருப்பு said...

மனிதர்கள் திருந்துவார்கள்..இது.....எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்தாது.
அய்யோ..கடவுளே இது போன்ற ஜென்மங்களிடமிருந்து முதலில் தமிழரை காப்பாற்று
மற்றவர்களிடமிருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வோம்
திருக்குவளையில பிறந்து இது குவா..குவா..என்று கத்தியதாம்.
அப்போது வீட்டுக்குள் 4 திருடர்கள் வந்தார்களாம்.
அன்று இது கழுத்தில் திருடர்களின் கையோ, காலோ பட்டிருந்தால்...
தமிழுக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா..

ஈழப்பிரச்சனையில் இனி என்ன செய்ய முடிவெடுத்துள்ளீர்கள்? நிருபர்கள் கேள்வி
இனி என்ன செய்ய...சரி வாங்க டீ குடிக்க போகலாம்.- இது கருணாநிதி

தமிழைக் காக்க டீ குடித்து உயிர் வாழும் ஜென்மம்

Post a Comment