Pages

12 May 2009

என் மூத்த மகன் பிரபாகரன்தான்:சீமானின் தாய்


புதுச்சேரி மாநிலத்தில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் இன்று மதியம் 1 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டம் ஆரம்பித்தது.மாலை 5 மணி வரை இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இயக்குநர் பாரதிராஜா இக்கூட்டத்திற்கு தலைமையேற்பதாக இருந்தார். ஆனால் அவர் நேற்று சென்னை வந்த சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

இயக்குநர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி,கவுதமன்; கவிஞர்கள் அறிவுமதி, சினேகன் உட்பட திரையுலகினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சீமான் இக்கூட்டத்தில் பேசும்போது, ‘’சோனியாகாந்தி வாக்கு கேட்டு சென்னை வந்தபோது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அது, ஈழத்தில் சிந்திய என் சொந்தங்களின் ரத்தம்.

நாங்கள் என் சொந்தங்களை இழந்துவிட்டு துக்க வீட்டில் இருக்கும்போது வாக்கு கேட்டு வருகிறார் சோனியா. எங்களிடம் வாக்கு இல்லை. வாக்கரிசிதான் இருக்கிறது


இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.

அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அப்பாவுக்கு போன் போட்டேன். உன் அண்ணனுக்கு(பிரபாகரன்) கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா என்று சொல்லி என் இனமான தமிழ் உணர்வுக்கு மேலும் உரமிட்டார்

என் அம்மாவுக்கு பேசினேன். அப்போது என் அம்மா, நான் 5 பிள்ளைகள் பெற்றேன். ஆனால், என் மூத்த மகன் பிரபாகரன் தான். நீ போராட்டத்தில் மனம் தளராதே என்று சொல்லி எனக்கு ஆறுதல் அளித்தார்

தமிழ் பெருமகளே(ஜெயலலிதா)...ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க வேண்டாம்.


இந்திய ராணுவம்தான் முன்பு அமைதிப்படை என்கிற பேரில் என் இனமான தமிழ் மக்களை அழித்தது. என் சகோதரிகளை அவமானப்படுத்தியது. இப்போதும் இந்த ராணுவம்தான் என் இனமான தமிழ் மக்களை அழிக்கிறது.

அதனால் அந்த ராணுவத்தை அனுப்பி எங்களை கேவலப்படுத்த வேண்டாம். உங்களிடம் நாங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள். அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்கு அழுத்தமாக குரல் கொடுத்தது நான் தான் என்று ஜெயலலிதா ஏற்கனவே பேசியவர் தான். எனவே அவர் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி குரல் கொடுத்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்து கொள்வோம். இந்த ஒரு உதவியை மட்டும் ஜெயலலிதா செய்யவேண்டும். ஜெயலலிதா எப்போதுமே தான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர். அந்த அடிப்படையில் இந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment