Pages

04 May 2009

இன்று முதல் பஸ்களில், முன்பு இருந்த கட்டணம் வசூலிக்கப்படும் !


தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அண்மையில் திடீரென குறைக்கப்பட்டன. விரைவுப் பேருந்து, எல்.எஸ்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட், டீலக்ஸ் என பஸ்களின் வகைக்கேற்ப இருந்த அதிக கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.13 எனக் குறைத்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் (மே 13) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பஸ் கட்டணங்களை தமிழக அரசு குறைத்தது ‘தேர்தல் விதிமுறை மீறல்' எனப் புகார் எழுந்தது. இது குறித்து உரிய நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.

கட்டணங்களை உயர்த்துவதற்கும் குறைப்பதற்கும் முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுடன் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை'' என அமைச்சர் நேரு விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் பஸ் கட்டணக் குறைப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலர் ஸ்ரீபதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று விளக்கம் அளித்தார்.

ஆனால் அவரது கருத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து மீண்டும் பழைய பஸ் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து துறையினர் கூறும் போது, ‘நாளை காலை முதல் பஸ்களில், முன்பு இருந்த மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

2 comments:

Anonymous said...

///‘நாளை காலை முதல் பஸ்களில், முன்பு இருந்த மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படும்''///

மக்கள் பாவம் சும்மா விடாதுங்க!

சுந்தர் said...

வயித்தெரிச்சல் தான் போங்க, சும்மா இருந்த புண்ணை சொறிஞ்சி விட்ட மாதிரி ஆச்சி .

Post a Comment