Pages

15 May 2009

அ.தி.மு.க., மதவாத கட்சியல்ல: -காங்கிரஸ்

மதவாத கட்சியல்ல என்று காங்., மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியிருப்பது தி.மு.க., காங்., இடையேயான கூட்டணியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். காங்கிரஸ், பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.

பா.ஜ., கட்சி தமிழகத்தில் அதிமுக.,வுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும், அதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விரைவில் ஜெயலலிதாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அதிமுக மதவாத கட்சியல்ல’’ என்று கூறியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment