Pages

06 May 2009

என்னை நம்பு : கலைஞர்


உடல்நல குறைவு காரணமாக தமிழக முதல்வர் கலைஞர் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் இரண்டாவது கண்டம். இந்த கண்டத்திலும் உனை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

மகிழ்ச்சிக்கு காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனை ஆண்டு காலமாக பணியாற்றி வருகின்றவன் நான்.

தேர்தல் நாள் நெருங்கி விட்டது. தேர்தல் பணிகளில் நம்முடைய திமுக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதேபோல விடுதலைச் சிறுத்தைகளும் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை கேட்கும்போது மருத்துவமனையில் இருக்கும் எனக்கு மருந்தாக இருக்கிறது. அந்த மருந்தை தொடர்ந்து எனக்கு அளித்துக்கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதை என்னை நம்பு என்னை மறவாதே நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன், எங்களுக்காக நீ, உங்களுக்காக நான் என்பதை மறந்துவிடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்.

யார் என்ன பொய் உரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுக்களில் இறங்கினாலும், அவைகளையெல்லாம் நம்பாதே என்னுடைய அன்புக்கும் பண்புக்குரிய பேராசிரியர்களும், மூத்த வழக்கறிஞர்களும், மூத்த தமிழரிஞர்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகளை பார்த்து நடந்துகொள் என்று கூறினார்.

No comments:

Post a Comment