Pages

27 April 2009

பிரதமர் கோரிக்கை கருணாநிதி நிராகரிப்பு


முதல்வர் கருணாநிதியுடன் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.

இலங்கையில் போரை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமரின் ‌கோரிக்கையை நிராகரித்த முதல்வர், எல்லாரும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து பிரதமரின் விஷேச தூதர் சென்னை வரவிருக்கிறார்.

மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் மு.க.அழகிரி தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில்,

இலங்கையில் புலிகளைக் கொல்கிறோம் என்ற பெயரில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதை மன்னிக்க முடியாது என்றார்.

2 comments:

Anonymous said...

நல்ல நாடகம் நடக்குது.

Anonymous said...

Just for ஓட்டு ஓட்டு .....Please keep your self interest and political carrier aside. Those people who belive you are the saviour are all dead by now.

Post a Comment