Pages

28 April 2009

காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் - சீமான்


சென்னை ஐகோர்ட்டு சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது. இந்த நிலையில் புதுவையில் தொடரப்பட்ட வழக்கில் சீமான் புதுவை கோர்ட்டில் ஜாமீன் கேட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட புதுவை நீதிமன்றம் அவருக்கு கடந்த 24-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது

அதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் செய்தியாளர்களிடம்:

சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது. தவறானது.
தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது. எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும்வரை போராடுவோம்.ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம். இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். இதற்கான போராட்டங்களை நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.

காங்கிரசுதான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்று பார்க்கமாட்டோம். இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னை கைது செய்த இடத்திலிருந்து பிரச்சாரம் தொடங்குவேன்என்று தெரிவித்தார்.

1 comment:

Unknown said...

தமிழர்களின் பிரச்சனை தீர ஒரெ வழி !

தமிழ் நாட்டில் உள்ள கேரள இனத்தவர்களை துரத்துவோம் என்று
கூறினால் போதும்.

இலங்கைப்பிரச்சனை மட்டுமல்ல, காவிரி,முல்லை‍ ,பெரியாறு,மூணாறு
எனப் பல பிரச்சனை ஒரே நாளில் தீரும்.

ஆனால் அதை விடுத்து கண்டதையும்,உண்பதையும் செய்வதால்
ஒரு பயனுமில்லை.

Post a Comment