Pages

29 April 2009

இலங்கை பிரச்னை சி.டி.,க்கள் வீடு தேடி வரும்: வைகோ


இலங்கை பிரச்னை குறித்த சி.டி.,க்கள் வீட்டுக்கு வீடு வரும் என விருதுநகர் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வைகோ அவனியாபுரத்தில் நேற்று பேசினார்.

அவனியாபுரம் பஸ்ஸ்டாண்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். போஸ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இரவு 9.30மணிக்கு வந்த வைகோ பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் நாடுகளில் வாங்கப்பட்ட குண்டுகள் இலங்கையில் தமிழன் தலையில் விழுகிறது. காலை 6மணி முதல் மதியம் ஒரு மணிவரை 5ஆயிரத்து 600 குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியுள்ளது. இதில் கொத்துகுண்டுகள் இந்தியா வழங்கியது. ஆயுதம் மட்டுமல்ல, ஆட்களையும் அனுப்பியுள்ளது இந்தியா. அங்குள்ள ரேடார்களை சரிசெய்த இந்தியர்கள் சிந்தாமணி, ஏ.கே.தாகூர் காயமடைந்துள்ளனர். டீசல் சென்றால் ராஜதுரோகம் என்றால், இலங்கைக்கு ஆயுதம் சென்றது மட்டும் என்ன நியாயம்? இலங்கை போருக்கு காரணம் மத்திய அரசு, காங்., மற்றும் சோனியா என குற்றம் சாட்டுகிறேன்.

மகாபாரதத்தில் அபிமன்யுவை சுற்றி எல்லோரும் தாக்குவார்கள், அது போல இலங்கை தமிழர்களை சுற்றி தாக்குகிறார்கள். இலங்கை பிரச்னை பற்றி துண்டுபிரசுரம் கொடுத்த மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சி.டி.,க்களாக இவை வீட்டுக்கு வீடு வரும்' என்றார். பத்து மணிக்கு பேச்சை வைகோ முடித்தார். இலங்கை பிரச்னை குறித்து பேசியபோது கண்கலங்கினார்.

No comments:

Post a Comment