
கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்ததற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரிடம் ஷாருக்கான் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் சுழற்சி முறையில் கேப்டன் பதவி நியமிப்பது தொடர்பான பயிற்சியாளர் புக்கன்னனின் யோசனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த யோசனையை கடுமையாக குறை கூறியிருந்தார். அணியின் உரிமையாளரான ஷாருக்கான் இதற்கு கடும் பதிலடி கொடுத்தார்.
கவாஸ்கர் வேண்டுமானால் சொந்தமாக ஒரு ஐபிஎல் அணியை வாங்கி தனது இஷ்டம் போல நடத்திக் கொள்ளட்டும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்திற்காக கவாஸ்கரிடம் ஷாருக்கான் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக கவாஸ்கருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் ஷாருக்கான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment