Pages

13 March 2009

பழி வாங்குவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த கூடாது: திருநாவுக்கரசர்

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரச‌ர், இல‌‌ங்கை‌யி‌ல் தமிழர்கள் சம உரிமையோடு வாழ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும், இதை இ‌ந்‌தியா வலியுறுத்த வேண்டும் எ‌ன்று தெரிவித்தார்.

மேலும் லட்சக்கணக்கான அகதிகள் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள் எ‌‌ன்று‌ம் இதனா‌ல் இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கை ராணுவம் இறுதி போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா.சபை உள்பட பல வெளிநாடுகள் இலங்கையை கண்டித்து விட்டன. ஆனால் இந்தியா மட்டும் பார்வையாளராக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

பொதுக்கூட்டங்களில் ஆவேசமாக பேசியதை வைத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது தவறானது. பேச்சாளர்களின் இத்தகைய பேச்சால் ரத்தகளறி ஏதும் ஏற்பட போவதில்லை. அரசியல் நோக்கத்தில் பழி வாங்குவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த கூடாது. அதே நேரத்தில் பேச்சாளர்களுக்கும் நிதானம் தேவை. மேடையின் முன்பு இருப்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது பேசக்கூடாது எ‌ன்று திருநாவுக்கரசர் கூறினார்.

No comments:

Post a Comment