Pages

09 March 2009

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அதி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அதி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அக் கட்சியினர் சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு துணைபோகும் தி.மு.க. அரசு ஆகியவற்றைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று முன்னதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அ.தி.மு.க. சார்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் அதி.மு.க. பேனர்களும் கட்டப்பட்டுள்ளன.

காலை 9 மணிக்கு தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

மதிமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு:

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

பழ. நெடுமாறன் வரவேற்பு:

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயலலிதா நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை வரவேற்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து வலியுறுத்துவார் என்று நம்புவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment