Pages

29 March 2009

ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார், அடுத்த 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் ராமதாஸ்: விஜயகாந்த்


திருநெல்வேலி: ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார், அடுத்த 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் என, ராமதாசை விஜயகாந்த் சாடினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆலங்குளத்தில் நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்துப் பேசியதாவது: நாங்கள் அ.தி.மு.க., - தி.மு.க.,வைப் போல மக்களை ஏமாற்ற மாட்டோம். ஏற்கனவே கூறியபடி தேர்தலில் தனித்து நிற்கிறோம்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சாட்டையைக் கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. காவிரி, முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளில் பதவி வகிப்போர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லோக்சபா தேர்தல் தேசத்தின் தலைவிதியை மாற்றக்கூடியது.

கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை
ஏற்படுத்தமுடியும். எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், 'பிள்ளையோ பிள்ளை' என நடிக்கிறான். அப்பன், 'கொள்ளையோ கொள்ளை' என அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://www.dinamalar.com/latestnews.asp

1 comment:

ராமசாமி said...

உங்க திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதே உங்கள் மக்கள் பற்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பவே என் திருமண மண்டபத்தின் இடம் மக்களுக்கு தேவை என்றால் அதனை நான் இலவசமாகவே வழங்குகிறேன் என்று அறிவித்திருந்தால், நீங்கள் எங்கள் மனதில் ஆழமாக இடம்பெற்று இருப்பீர்கள். ஆனால் இன்றுவரை அதே பொலப்பம்தான். என்னோட மண்டபத்த இடிச்சிட்டாங்க என்னை பழிவாங்கிட்டாங்கன்னு எல்லா கூட்டத்துலயும் சொல்றீங்க. நீங்க எப்படி பொதுநலன் பத்தி பேசுறிங்க? அத நாங்க வேற நம்பனுன்னு நெனைக்கிறீங்க.

அடுத்து வடிவேலு பிரச்சினை, வடிவேலே உங்க ஆளுங்ககிட்டே பிரச்சினை பண்ணியிருந்தால் கூட நீங்க நேரா போய் வடிவேலுகிட்டே பேசி இருந்தா உங்கள தூக்கி வச்சி கொண்டாடி இருப்போம். நீங்களோ சும்மா இருந்திட்டிங்க, அத சரியா பயன்படுத்திக்கிட்டு வடிவேல ஆளும்கட்சி தூண்டிவிட்டப்ப கூட போய் பேசி இருக்கணும், தவற விட்டுட்டீங்க...

Post a Comment