
மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம் என கூறினர்.
மேலும் ஈழ சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது. எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது.
தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர்.
போலீசாரே திட்டமிட்டு கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை.
வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். என தெரிவித்தார்
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Post a Comment