Pages

23 January 2009

ஒபாமாவால் மூடப்படும் ரகசியம்


உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் சிஐஏ ரகசிய சிறை மையங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது உண்மையா? அப்படியென்றால் இதுவே அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமையாதா? இதன் மூலம் வெளியேறிய பல்வேறு தீவிரவாதிகள் எதிர்காலத்தில் அமெரிக்காவையோ அல்லது வேறு நாட்டையோ அச்சுறுத்த வழிவகுக்காதா? மூடுவதற்க்கு பதிலாக சரியான வழிமுறைகளை மனித நேயத்துடன் அந்தந்த இடங்களில் உள்ள நாட்டுடனோ அல்லது ஐக்கிய சபையின் துணையுடனோ வெளிப்படையாக கையாண்டால் எதிகாலத்தில் பயம் இல்லாமல் வாழலாம். இந்தியா பல்வேறு சந்தர்பங்களில் வெளிவிட்ட திவிரவாதிகளின் மூலமாகத்தான் நாடாளுமன்றம் மற்றும் மும்பை தாக்குதல்கள் நடைபெற்றது என நிருபிக்கபட்டுள்ளது, மேலும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் யார் சொல்லையும் கேட்காமல் தீவிரவாதத்தை வளர்த்து வரும் நிலையில் இதுபோன்ற சிறைகளை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் வெளிப்படையாக மனித நேயத்துடன் நடத்தினால் அனைத்து உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும். இப்போதய சூழலில் வளரும் நாடுகளோ அல்லது வறுமையில் உள்ள நாடுகளோ தீவிரவாதத்தை வேறறுக்க வேற்று நாட்டுடன் போர் தொடுக்க இயலாது, உதரணமாக சமீபத்திய மும்பை சம்பவத்தால் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு அல்லது ஒடுக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும் அந்நாடு மறுத்து வருகிறது, இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுக்க இயலாது, ஏனெனில் இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் பெற்றுள்ள நாடுகள், இதனால் இரு நாடுகளுமே கடுமையான சேதங்களை சந்திக்க நேரிடும். ஆனால் மேலே சொல்லப்பட்ட யாவும் நடை பெறப் போவதில்லை மாறாக அமெரிக்கா ஒரு வாசல்வழியாக வந்து ரகசிய சிறையை அடைக்க சொல்லிவிட்டு புற வாசல் வழியாக வேறொரு ரகசிய சிறையை திறக்கும். அப்போதுதான் தன்னை நாட்டாமையாக உலகநாடுகளிடம் நிரூபணம் செய்து கொள்ள முடியும் இதற்க்கு ஒபாமா ஒரு விதிவிலக்கல்ல. ஏனெனில் ஒபாமா அமெரிக்க பணக்காரர்களின் கைகூலி.

No comments:

Post a Comment