
மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளையும் அடையாறு பறவைகள் சரணாலயக் கழிமுகப் பகுதிகளையும் மீனவர் குடியிருப்புகளையும் நாசம் செய்யக்கூடிய பறக்கும் சாலை திட்டத்தை தி.மு.க அரசு செயல்படுத்த இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் இராமதாசுக்கு ஞானி பூச்செண்டு கொடுத்துள்ளார்
நாட்டில் ஒரு நல்லது நடந்தால் அதை தடுக்க காரணம் கண்டுபிடித்து வரிந்து கட்டிக் கொண்டு வருவதுதான் இவர்கள் இருவரின் வேலை அதில் வியப்பு அடைவதற்கு ஒன்றுமில்லை, இப்போது இவர்கள் இருவரும் சென்னையில் பயன்படுத்துகிற பல சாலைகள் இது போன்றுதான் மாற்றியமைக்கப்பட்டது. இதுபோல் எவரேனும் அப்போது குரலெழுப்பி தடுக்கப் பட்டிருந்தால் இவர்கள் இருவரும் ஆளுக்கொரு இறக்கையை கட்டிக்கொண்டு பறந்துதான் சென்னையை வலம் வர வேண்டியிருக்கும். இவ்வாறு சென்னையில் மக்கள் பயன்படுத்தும் இடைத்தை சாலை அமைக்க ஒரு வகையில் காரணமாக இருப்பது இராமதாசுதான், சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட துணை நகர திட்டத்தை கிடப்பில் போடச் செய்த பெருமை இவரைதான் சேரும், இந்த துணை நகர திட்டத்தை கைவிட்டதால் தான் நெருக்கடியை குறைக்க பறக்கும் சாலை அமைக்க விருக்கின்றனர், வருடா வருடம் சென்னையில் வேலை தேடி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஏற்கனவே சென்னை வீங்கி பெருத்து விட்டது, இன்னும் பத்து வருடங்களில் சென்னையில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து விடும், ஏற்கனவே இது போன்ற எதிர்காலத் தேவைக்கான திட்டங்களில் அரசாங்கம் கால தாமதமாக அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, மக்கள் தொகை இன்னும் அதிகமாக பெருத்துவிட்டால் இது போன்ற செயல் திட்டங்களை அமைக்க அரசாங்கமும் மக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள், உதாரணத்திற்கு கத்திப்பார ஜங்சனிலும், தீ நகரிலும் பாலங்கள் அமைக்கப்படும் பொழுது மக்களும் அரசாங்கமும் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது இவர்கள் இருவருக்கும் தெரியும், சென்னை போன்ற பழமையான நகரத்தில் ஒரு புதிய சாலை தேவை கருதி உருவாக்கவிருந்தால் அதில் சில பொதுமக்கள் பாதிப்படைவது இயல்பே எனவே அவ்வாறு பாதிப்படையும் பொதுமக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சரியான இழப்பீடு கிடைக்க போராடுவதை விட்டு விட்டு, மக்களின் கவனத்தை பெற்று அதன் மூலம் ஓட்டு வாங்க இதுபோன்ற நல்ல திட்டங்களை எதிர்ப்பதை விட்டு விடுங்கள், உடனே உன்னிடம் இப்படியொரு இடத்தை கேட்டால் கொடுப்பாயா? என கேட்காதீர்கள், இது போன்று பாதிப்படையும் பொது மக்களில் நானும் ஒருவனாய் இருந்தால் எனக்கு நிச்சயமாக வலியிருக்கும், அந்த மாதிரியான வலி உள்ளவர்களை தெளிவுபடுத்தி இன்றைய மக்களுக்கும் எதிகால மக்களுக்கும் பயன் தரும் இது போன்ற திட்டங்களை செயல் படுத்த உதவுவது உங்களைப் போன்ற பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்குண்டான பொறுப்பு.
தயவு செய்து அந்த பொறுப்பை உங்கள் ஓட்டுக்காகவும் புகழுக்காகவும் தட்டிக் கழித்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment