Pages

29 January 2009

இன்டெர்நெட்டுக்கு அடிமையாகும் சைனிஸ் இளைஞர்கள்


சைனாவில் சமீபகாலமாக இன்டர்நெட்டுக்கு நிறைய இளைஞர்கள் அடிமையாகி தங்கள் அன்றாட வாழ்க்கையினை தொலைக்கின்றனர் என பெற்றோர்கள் கவலை படத்தொடங்கியுள்ளனர்.

சைனிஸ் தாய் வாங்க் கோன்சியா (45) தனது மகனை வலுக்கட்டாயமாக 700 தொலைவில் உள்ள பீஜிங் மிலிட்டரி காம்பொண்ட் அழைத்து சென்றுள்ளார், "இன்டர்நெட்டினால் தன்னை மறந்து அபாயத்தை நோக்கி சென்று விட்டான் காலையில் கம்ப்யூடரை தொடவிடவில்லை என என்னை அடித்து கடித்து வைத்து விட்டான்" என வேதனை பட்டுள்ளார் வாங்க் கோன்சியா. எற்கனவே வந்துள்ள 3000 இளைஞர்களுக்கு பீஜிங் மிலிட்டரி காம்பொண்ட் கேம்ப் பயிற்சி அளித்துவருகிறது. கேம்ப் உள்ளே நுழையும் இளைஞர்கள் குறைந்தது மூன்று மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும், அவரிகளுக்கும் வெளி உலகத்திற்க்கும் தொடர்பு ஏற்படுத்தும் சாதனமான செல் போன் மற்றும் கம்ப்யுட்டர் ஆகியவற்றை வைத்து கொள்ளக் கூடாது எனவும் கேம்ப் நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும் மிலிட்டரியில் உள்ள அனைத்து பயிற்சிகளையும் மிலிட்டரி கேம்ப்பில் பயிற்சி எடுப்பவர்களுக்கு சொல்லித்தரப் படும் எனவும் கூறுகின்றனர். "முதலில் இது ஒரு நரகம் என நினைத்தேன் பின்பு கடுமையான பயிற்சிக்குபிறகு வாழ்க்கையை இண்டர்னெட் இல்லாமல் எப்படி வாழ்வேண்டும் என கற்றுக்கொண்டேன்" என கூறுகிறார் கேம்ப்பில் இரண்டு மாதப் பயிற்சி பெறும் இளைஞர் யாங் சுடங்.
மனிதனின் வேலைகளை குறைப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்ட கம்ப்யுட்டர் மனிதனை அடிமைப் படுத்துகிறது என்பது வேதனை அளிக்கின்ற விஷயம், இந்தியாவில் இப்போது கம்ப்யுட்டர் வாங்கும் என்ணிக்கை அதிகரித்துள்ளது இந்த சூழ்நிலையில் இதுபோன்று இந்தியாவிலும் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை முதலிலேயே கண்டிப்பது அவசியம்

No comments:

Post a Comment