Pages

29 January 2009

தண்டிக்கப் படவேண்டியவர்கள் ஸ்ரீராம் சேனா மட்டுமல்ல!


இந்திய ஆங்கில தொலைக்காட்சி செய்திச் சேனல்களை பார்த்தால் ஏதோ மிகப் பெரிய கலவரம் நடந்தது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. ஸ்ரீராம் சேனா அமைப்பினர் கடந்த வாரம் நடத்திய அட்டூளியத்தை மிகப் பெரிதாக ஊதிவிட்டன, இவர்களுக்கு வேறு செய்திகள் கிடைக்க வில்லையா? அல்லது ஸ்ரீராம் சேனாவுடன் ஏதேனும் பகையா? என்று தெரியவில்லை. ஸ்ரீராம் சேனாவின் குற்றத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுக்கள் ஆனால் குற்றப்பின்னனியின் காரணம் என்ன என கூற முற்படவில்லை, மும்பை சம்பவத்தில் தாஜ் ஒட்டலில் நடந்தவையை முழுமையாக காட்டி விட்டு, இரயில் நிலையத்தில் அப்பாவி மக்களின் தாக்குதலை மறைத்தது போல்தான் இந்த விஷயத்திலும் நடந்து கொள்கின்றன. நடந்த சம்பவத்திற்க்கு ஸ்ரீராம் சேனா மட்டும் காரணமில்லை நாம் எல்லோரும்தான். முதலில் தண்டிக்க அல்லது கண்டிக்கப் பட வேண்டியது அங்கு சென்ற பெண்களை, ஒரு சமுதாய ஒழுக்க கட்டுப்பாடுள்ள இந்த நாட்டில் வாழும் நாம் இந்த மாதிரியான ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மேல் நாட்டு கலாச்சாரத்தை ஏன் நாம் பின்பற்ற வேண்டும் என்று புரியவில்லை, அமெரிக்காவில் உள்ள பாதிப்பேர் இவ்வாறான ஒழுக்க கேடான காரியங்களில் ஈடுபடுவதுதான் அவர்களின் பொழுதுபோக்கு. எனெனில் அவர்களின் கலாச்சாரத்தை அவ்வாறு உருவாக்கிக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு ஆறு மாதம் தங்கினால் முதல் மூன்று மாதம் அதன் நகர கட்டமைப்பும் அதன் நிர்வாகமும் நம்மை வியக்க வைக்கும். மக்கள் ஒவ்வொருவரும் விதிகளுக்கு கட்டுப்பட்டு சாலையில் கார் ஒட்டுவது முதல் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பது வரை நம்மை வியப்பில் ஆழ்த்தும் எனெனில் நம் நாட்டில் யாரும் சாலை விதிகளை மதிப்பதில்லை சுற்றுப் புறத்தை சுத்தமாக வைப்பது கிடையாது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அங்கு நாம் வியக்க ஒன்றும் இருக்காது எனெனில் நம்மைப் போல் அவர்களுக்கு தீபவளியோ பொங்கலோ கிடையாது, கூடி கொண்டாடி மகிழும் படியான பண்டிகையோ உறவினர்களோ அவர்கள் ஏற்படுத்தி கொள்வது கிடையாது, அதற்கு மாறாகத் தான் பப் பார் போன்றவைகளை உருவாக்கி அவர்கள் மகிழ்கின்றனர், இதை அப்படியே நாம் காப்பி அடித்து நமது கலாச்சாரத்தை மறந்து போய் கொண்டிருக்கிறோம். சரி நாம் மேலே உள்ள விசயத்திற்க்கு வருவோம் அடுத்து தண்டிக்கப் பட வேண்டியது ஸ்ரீராம் சேனா போன்ற பல மத அமைப்பினர், இவர்கள் வளர்வதற்கு முதற் காரணம் நம் மக்கள், அரசியல் வாதிகள் கொடுக்கும் ரூ10 க்காக நாம் இவர்களை போன்றவர்களுக்கு ஒட்டளித்து அரியணையில் ஏற்றி விடுகிறோம், பின்னர் அவர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள அறியாமை மக்களின் உணர்சிகளை தூண்டிவிடுகின்றனர். மீடியாக்கள் ஒருபுறம் தாங்கள் வாழ்வதற்க்காக இது போன்ற சில காரியங்களை மிகைப் படுத்துவதும், அரசில்வாதிகள் செய்யும் சில அட்டூளியங்களையும், பொது மக்கள் படும் சில இன்னல்களையும் குறைப் படுத்துவதுமாக கொண்டுள்ளனர். எனவே சம்பவத்தின் முதல் காரணகர்த்தா பெண்களை தெய்வமாக வணங்கும் இந்த நாட்டில் சீர்கேட்டை செய்ய புறப் பட்டுள்ள பெண்கள், இரண்டாவது காரணகர்த்தா ஒவ்வொரு மத நூலிலும் உள்ள கருத்துக்கள் ஏன்? எதற்கு? எப்படி? என ஆராய்ந்து புரிந்து கொள்ளாமல் செயல்படும் ஸ்ரீராம் சேனா போன்ற பல மத அமைப்பினர் மூன்றாவது இது போன்ற மத அமைப்பினர்களை தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொள்ளும் அரசியல்வாதிகள், நான்காவது இவர்களுக்கு ஒட்டளிக்கும் அல்லது ஒட்டுரிமையை பயன்படுத்தாத நாமும்தான்!

No comments:

Post a Comment