25 January 2009
இலங்கை இராணுவம் - புலிகளின் கையிலா?
திடீரென புலிகளின் கொரில்லா தாக்குதல் செய்தி, அதை தொடர்ந்து இலங்கை இராணுவம் பேரிழப்பு என பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையே என இலங்கை இராணுவமோ புலிகளோ அதிகாரப்பூர்வமாக இன்னும் செய்தி வெளியுடவில்லை. ஒரு வேளை புலிகள் இப்படி ஒரு தாக்குதல் நடந்தது என வெளியிட்டால் இலங்கை இராணுவத்திற்க்கு இது ஒரு பேரிழப்பு என்பது ஐயமில்லை. ஆனால் புலிகள் உண்மையில் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன. அவர்களால் இலங்கை இராணுவத்தை சமாளிக்க முடிகிறதா? சில நாடுகளின் இராணுவ உதவியுடன் போர் செய்து வரும் இலங்கை எப்போது தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும்?, ஒருவேளை முல்லை தீவை இலங்கை இராணுவம் தன் கட்டுப் பாட்டிற்க்கு கொண்டு வரும் பட்சத்தில் பிரபாகரனை பிடிக்கவில்லை என்றால் அடுத்த முயற்சி என்ன? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேட வேண்டியுள்ளது. எனவே புலிகளைப் போல் நாமும் அமைதி காப்போம் பதிலை நோக்கி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment