Pages

Showing posts with label Fun. Show all posts
Showing posts with label Fun. Show all posts

11 June 2009

Cost Cutting Chair

Specially designed to tackle the recession time and to reduce the expenses.

26 May 2009

போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை

சேலம் அருகே மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் குறைய வேண்டி போலீசார் கிடா வெட்டி பூஜை செய்தனர்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிணற்றில் விழுந்து மூதாட்டி சாவு, சர்க்கரை வியாதி அவதியால் பெரியவர் தூக்கிட்டு சாவு, தறி தொழிலாளி தற்கொலை, திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை என தொடர்ந்து தற்கொலை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பிணத்தை கைப்பற்றுதல், பிரேதப் பரிசோதனை, வழக்கு விசாரணை, நீதிமன்றம் என போலீசார் கடுமையாக அலைந்து நொந்து போயினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசை தினத்தில் கிருத்திகையும் வந்ததால், சிறப்பு பூஜை செய்ய தீர்மானித்தனர். தற்கொலை வழக்குகள் குறைய வேண்டி போலீஸ் ஸ்டேஷன் முன் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த பூஜையில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

பூஜையின் போது இனிமேலாவது கொலை வழக்குகள் குறைய வேண்டும் என்று போலீசார் நெஞ்சுருக வேண்டிக் கொண்டனர். பூஜைக்கு பிறகு கிடா கறியை போலீசார் பகிர்ந்து கொண்டனர்.

போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை செய்த சம்பவம் சரக போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

01 May 2009

ஓசி விளம்பரம் - சிரிக்க மட்டும்.

ஓசி விளம்பரம் - சிரிக்க மட்டும்.

24 March 2009

தற்போதைய ஐ.டி ஊழியர்களின் நிலை, அருமையான விளக்க படம்.


தற்போதைய அலுவகத்தில் உங்களின் நிலை அந்த மனிதனை போல்.
வேலையை விட்டு சென்றல் உங்களின் நிலை அந்த மீனை போல்.
என்ன கொடுமை சரவணா.

Today's job market is as bad as the PICTURE.

If you work in your existing company you will die like the MAN and If you
quit the job you will die like the FISH.

12 March 2009

அயன் புகைபடங்கள் - சிரிக்க மட்டும்.

அயன் புகைபடங்கள் - சிரிக்க மட்டும்.


20 February 2009

அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்--நகைச்சுவை

சுபிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த சு.சுவாமி எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும்.

தொடர்ந்தும் அவர் இனியும் தொடர்ந்து தங்க பாலு , சோ போன்றோரும் என்போல பதிக்கப் பட்டால் , அவர்களுடன் கூட்டணி வைத்து , பாதிக்கப்பட்ட எல்லோரும் மண் மோகன் சிங்கை சந்தித்து மர்கஜர் கொடுக்க டெல்லி பயணமா இருப்பதாக தெரிவித்தார்.

தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது -

சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி:முகில்,ஹரன்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2419:2009-02-19-17-20-57&catid=50:time-pass&Itemid=110

17 February 2009

பட்ஜெட்டில் 'குடி' மகன்களுக்கு சலுகை



இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஊறுகாய்க்கு வரிகுறைப்பு செய்யப்படும் என அமைச்சர் க.அன்பழகன் அறிவித்தார்.



பட்ஜெட் துளிகள்

மீனவ நிவாரண நிதிக்கு 42 கோடி ஒதுக்கீடு

தமிழில் பெயர் வைக்கப்படும் சினிமா படத்துக்கான சலுகை குறித்து மறுபரிசீலனை

56மாலை நேர நீதிமன்றங்கள்

திருவண்ணாமலை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள்

அரவாணிகளுக்கு நலவாரியம் மற்றும் குடும்ப அட்டை

2500 நடு நிலை பள்ளிகளுக்கு கணினி வழங்க 50கோடி நிதி ஒதுக்கீடு

2ஆயிரம் கோடிக்கு விவசாய பயிர்க்கடன்

இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்கிறது

கூட்டுறவு கடன் வட்டியை அரசு செலுத்த முடிவு

மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர்வில்லை

சாலை மேம்பாட்டுக்கு ரூ. 3087 கோடி

12 February 2009

ஜட்டி அனுப்பும் பெண்களுக்கு புடவை - இராம்சேனா

நாகரீகத்தை விரும்பும் பெண்களை பயங்கரமாக தாக்கிய ராம்சேனா அமைப்பினரின் முட்டாள் தனத்தை விளக்கும் வகையில் வித்தியாசமான, அமைதியான, அதேசயம் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தை நடத்த, பெண்கள் அணியும் ஜட்டிகளை அந்த அமைப்பினருக்கு பரிசாக அளிப்பது என்று முடிவு செய்தார் இந்த அமைப்பை தொடங்கிய நிஷா சுஷானி .

இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தங்களுக்கு ஜட்டி அனுப்பும் பெண்களுக்கு நாட்டின் பாரம்பரிய உடையான புடவை பரிசாக அனுப்ப இராம்சேனா தலைவர் முடிவு செய்துள்ளார்

ஜட்டிக்கு புடவை
சரியான போட்டி

06 February 2009

உலகத் தமிழர்களுக்காக உழைத்ததால் நோபல் பரிசுக்கு கலைஞர் பெயர் பரிந்துரை



உலகத் தமிழர்களுக்காக உழைத்ததால் நோபல் பரிசுக்கு கலைஞர் பெயர் பரிந்துரை

சென்னை: நான் உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி:- உலகத் தமிழர்களையெல்லாம் நீங்கள் ஏமாற்றி அவர்கள் காதில் பூ சுற்ற முயலுகிறீர்கள் என்கிறாரே ஒரு தலைவர்?

பதில் :- நான் உலகத் தமிழர் களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுவதை இலங்கை ராஜபக்சே மற்றும் மன்மோகன் சிங் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார், அமெரிக்கா முன்னாள் அதிபர் புஷ் பொக்கே அனுப்பியுள்ளார், சோனியாகாந்தி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார் மேலும் நோபல் பரிசிற்காக என்னுடைய பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் பணத்தை பங்கு போட ஜெ. வுடன் தீட்சிதர்கள் சந்திப்பு




சிதம்பரம் நடராஜர்கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனை கடந்த 2ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு ஏற்றது. அதைதொடர்ந்து கோவில் செயல் அதிகாரியாக கிருஷ்ணகுமார் பதவி ஏற்றார். இதற்கிடையில் கோவிலை அரசிடம் இருந்து எப்படியும் மீட்டே தீருவோம் என்று தீட்சிதர்கள் சென்னையில் முகாமிட்டு சட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அவர்கள் கோவிலை இந்து அறநிலையத்துறை ஏற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனை குறித்து, கோவில் தீட்சிதர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

அடுத்த ஜெ. ஆட்சியில் கோவில் பழையபடி தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிற்கு வருமா? வர வேண்டும் என்றால் தீட்சிதர்கள் சுருட்டி வந்த கோவில் உண்டியல் பணத்தில் பாதி ஜெ. க்கு கொடுக்க வேண்டும், உண்டியல் பணத்தை ஒழுங்காக கோபால புரத்துக்கு அனுப்பி இருந்தால் இந்த நிலைமைக்கு ஆளாக வேண்டியிருக்காது போயஸ் க்கும் போகவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

30 January 2009

இராமதாசுக்கு பூச்செண்டு கொடுக்கும் ஞானி


மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளையும் அடையாறு பறவைகள் சரணாலயக் கழிமுகப் பகுதிகளையும் மீனவர் குடியிருப்புகளையும் நாசம் செய்யக்கூடிய பறக்கும் சாலை திட்டத்தை தி.மு.க அரசு செயல்படுத்த இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டாக்டர் இராமதாசுக்கு ஞானி பூச்செண்டு கொடுத்துள்ளார்

நாட்டில் ஒரு நல்லது நடந்தால் அதை தடுக்க காரணம் கண்டுபிடித்து வரிந்து கட்டிக் கொண்டு வருவதுதான் இவர்கள் இருவரின் வேலை அதில் வியப்பு அடைவதற்கு ஒன்றுமில்லை, இப்போது இவர்கள் இருவரும் சென்னையில் பயன்படுத்துகிற பல சாலைகள் இது போன்றுதான் மாற்றியமைக்கப்பட்டது. இதுபோல் எவரேனும் அப்போது குரலெழுப்பி தடுக்கப் பட்டிருந்தால் இவர்கள் இருவரும் ஆளுக்கொரு இறக்கையை கட்டிக்கொண்டு பறந்துதான் சென்னையை வலம் வர வேண்டியிருக்கும். இவ்வாறு சென்னையில் மக்கள் பயன்படுத்தும் இடைத்தை சாலை அமைக்க ஒரு வகையில் காரணமாக இருப்பது இராமதாசுதான், சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட துணை நகர திட்டத்தை கிடப்பில் போடச் செய்த பெருமை இவரைதான் சேரும், இந்த துணை நகர திட்டத்தை கைவிட்டதால் தான் நெருக்கடியை குறைக்க பறக்கும் சாலை அமைக்க விருக்கின்றனர், வருடா வருடம் சென்னையில் வேலை தேடி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஏற்கனவே சென்னை வீங்கி பெருத்து விட்டது, இன்னும் பத்து வருடங்களில் சென்னையில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து விடும், ஏற்கனவே இது போன்ற எதிர்காலத் தேவைக்கான திட்டங்களில் அரசாங்கம் கால தாமதமாக அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, மக்கள் தொகை இன்னும் அதிகமாக பெருத்துவிட்டால் இது போன்ற செயல் திட்டங்களை அமைக்க அரசாங்கமும் மக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள், உதாரணத்திற்கு கத்திப்பார ஜங்சனிலும், தீ நகரிலும் பாலங்கள் அமைக்கப்படும் பொழுது மக்களும் அரசாங்கமும் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது இவர்கள் இருவருக்கும் தெரியும், சென்னை போன்ற பழமையான நகரத்தில் ஒரு புதிய சாலை தேவை கருதி உருவாக்கவிருந்தால் அதில் சில பொதுமக்கள் பாதிப்படைவது இயல்பே எனவே அவ்வாறு பாதிப்படையும் பொதுமக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சரியான இழப்பீடு கிடைக்க போராடுவதை விட்டு விட்டு, மக்களின் கவனத்தை பெற்று அதன் மூலம் ஓட்டு வாங்க இதுபோன்ற நல்ல திட்டங்களை எதிர்ப்பதை விட்டு விடுங்கள், உடனே உன்னிடம் இப்படியொரு இடத்தை கேட்டால் கொடுப்பாயா? என கேட்காதீர்கள், இது போன்று பாதிப்படையும் பொது மக்களில் நானும் ஒருவனாய் இருந்தால் எனக்கு நிச்சயமாக வலியிருக்கும், அந்த மாதிரியான வலி உள்ளவர்களை தெளிவுபடுத்தி இன்றைய மக்களுக்கும் எதிகால மக்களுக்கும் பயன் தரும் இது போன்ற திட்டங்களை செயல் படுத்த உதவுவது உங்களைப் போன்ற பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்குண்டான பொறுப்பு.
தயவு செய்து அந்த பொறுப்பை உங்கள் ஓட்டுக்காகவும் புகழுக்காகவும் தட்டிக் கழித்து விடாதீர்கள்.

29 January 2009

தென்னிந்தியாவின் ஒபாமா இளய தளபதி விஜய்


உலகத்தை மாற்றுவோம் எனக் குரல் கொடுத்து ஆட்சியை பிடித்தார் ஒபாமா, தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என குரல் கொடுக்க தயாராகி வருகிறார் தென்னிந்தியாவின் ஒபாமா இளய தளபதி விஜய்