Pages

08 December 2009

தூங்கும்போது மனைவிக்கு எய்ட்ஸ் ஊசி


வெலிங்டன் : எய்ட்ஸ் காரணமாக தன்னிடம் இருந்து மனைவி பிரிந்து விடாமல் இருக்க, தூங்கும்போது தனது ரத்தத்தை ஊசி மூலம் மனைவி உடலில் செலுத்திய கணவர் 14 ஆண்டு சிறை தண்டனை எதிர்நோக்கியுள்ளார்.
நியூசிலாந்தில் 2004ல் குடியேறிய தம்பதி, 2 குழந்தைகளுக்கு மருத்துவ சோதனை நடந்தது. அதில் கணவனுக்கு எய்ட்ஸ் இருந்தது. அது தெரிந்த பிறகு 2007 வரை கணவருடன் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட்டார்.
ஆனால், நாளடைவில் கணவரிடம் இருந்து எய்ட்ஸ் பரவுமோ என்று அஞ்சி, தள்ளி இருந்தார். கடந்த ஓராண்டாக தாம்பத்திய உறவுக்கு மனைவி மறுத்ததால் விரக்தியில் இருந்தார் கணவன். சமீபத்தில் இரண்டு முறை காலில் ஏதோ குத்திய வலியில் தூக்கத்தில் இருந்து எழுந்தார் மனைவி.
ஊசி குத்திய அடையாளம் இருந்தது. அடுத்த முறை இதுபோல வலிக்கவே தூக்கத்தில் இருந்து எழுந்தபோது ரத்தம் தோய்ந்த ஊசியுடன் கணவரைப் பிடித்து விட்டார். உறவுக்கு சம்மதிக்காத ஆத்திரத்தில் கணவர்தான் ஊசி மூலம் அவரது ரத்தத்தை ஏற்றி எய்ட்சை பரப்பியது தெரிந்தது. போலீசில் மனைவி புகார் செய்தார்.
விசாரணையில், தனது குற்றத்தை கணவர் ஒப்புக் கொண்டார். ��எய்ட்ஸ் காரணமாக மனைவியுடன் உறவு கொண்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அவளுக்கும் எச்ஐவி இருந்தால் உறவுக்கு சம்மதிப்பாள். மேலும், என்னை விட்டு பிரிய மாட்டாள் என்பதால் அப்படிச் செய்தேன்ÕÕ என்றார் கணவர்.
இதுபற்றி மனைவி கூறுகையில், ��எனது குழந்தைகள் நலனுக்காக அவரிடம் இருந்து பிரியாமல் வாழ்ந்தேன். அவரிடம் இருந்து எய்ட்ஸ் வந்து விடுமோ என்று பயந்தேன். எனக்கு எச்ஐவியை பரப்பி விட்டு �சாரிÕ என்று சொல்லி விட்டார்ÕÕ என்றார். நியூசிலாந்து எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு பிரதிநிதி கூறுகையில், ��இதுபோல எய்ட்ஸ் பாதித்த ஒருவரை இதுவரை பார்க்கவில்லை. உறவுக்காக நோயை கணவனே பரப்பியது கொடூரம்ÕÕ என்றனர். இந்த வழக்கில் கணவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என நியூசிலாந்து சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment