Pages

02 August 2009

இன்போசிஸ்சுக்கு (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு

தினமும் ரூ.1 லட்சம் கட்டணம் இன்போசிஸ்சுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நாட்டிலேயே முதல் முறை பெங்களூர், ஆக. 2: சாப்ட்வேர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இன்போசிஸ் டெக்னாலஜி நிறுவனத்துக்கு நாட்டிலேயே முதல் முறையாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்தை இன்போசிஸ் செலவு செய்கிறது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, முக்கிய தனியார் நிறுவனங்கள் மத்திய துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தன. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது. இதை பரிசீலித்த மத்திய அரசு, இன்போசி ஸ்சுக்கு சிஐஎஸ்எப் பாது காப்பு அளித்துள்ளது. துணை ராணுவம், தனியார் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அளிப்பது இதுவே முதல் முறை. இதற்காக நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்தை இன்போசிஸ் கட் டணமாக கொடுக்கும். எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் சி.ஐ.எஸ்.எப். ஐஜி மிஸ்ரா பேசும்போது, எங்களுடைய வேலை, தீவிரவாதிகளிடம் இருந்து நிறுவனத்தை பாதுகாப்பது மட்டுமே. சாதாரண சோதனை, பார்வையாளர்களை அனுமதிப்பது போன்றவற்றை தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினர் மேற்கொள்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment