Pages

22 August 2009

ரூ.10,000க்கு மேல் எடுத்தால் கட்டணம் மாதத்துக்கு 5 முறை மட்டுமே மற்ற வங்கி ஏடிஎம் இலவசம்

மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் இனி மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அத்துடன், ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூ.10,000 வரை எடுக்க மட்டுமே இலவசம்.



அதற்கு மேல் போனால், ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.ஒரு வங்கியின் வாடிக்கையாளர், தன்னுடைய வங்கியை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்ற வசதி ஏப்ரல் 1ம் தேதி அமலானது.

ஆனால், அறிமுகமாகி ஐந்தே மாதங்களில் இந்த திட்டத்தில் ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த வசதி இல்லாதபோது மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அது இல்லாததால் தங்கள் வாடிக்கையாளர், மற்றொரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை (இன்டர்சேஞ்ச் பீஸ்) வங்கிகளே செலுத்துகின்றன.
இதனால், வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.), ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றது.


இதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியிடம் ஐ.பி.ஏ. வலியுறுத்தியது.இதை பரிசீலித்த ரிசர்வ் வங்கி கோரிக்கையை அப்படியே ஏற்பதாக ஐபிஏவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, இன்னும் ஒரு சில தினங்களில் இது அமலுக்கு வரும் என மும்பையில் ஐபிஏ தலைமை அதிகாரி ராமகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.

இதன்படி, ��மாதத்துக்கு 5 முறைக்கு மேலாகவும், ரூ.10,000க்கு மேலும் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்ÕÕ என்று ஐபிஏ துணை செயல் அதிகாரி உன்னிக்கிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment