Pages

07 July 2009

வீடு வாங்குவோர் கவனத்துக்கு


சொந்த வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

* சிறப்புச் சலுகைகள் ஏதாவது குறிப்பிட்ட நிறுவனம் வழங்குகிறதா என்ற விவரம்.

* குறிப்பிட்ட வீட்டுத் தொகுப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் நம்பகத்தன்மை.

* தவணை முறையில் பணத்தைச் செலுத்தினால், கட்டுமான நிறுவனம் கோரும் முறையில்
தங்களின் பொருளாதார நிலையில் பணத்தைச் செலுத்த முடியுமா என்ற தெளிவு.

* முந்தைய திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனம் எப்படி முடித்து ஒப்படைத்திருக்கிறது என்ற விவரம்.

* எப்போது தமக்கு வீடு தேவை என்ற விவரம். உடனடியாகக் குடியேறப் போகிறோமோ, அல்லது திட்டத்தை முடித்து வீட்டை அளித்தால் போதுமா என்ற தெளிவு.

* நாம் விரும்புகிற மாதிரி `லே அவுட் பிளானும்', அளவும் இருக்கிறதா என்று பார்த்தல்.

* வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்திருக்கும் இடம்.

* வீடு அமைந்திருக்கும் பகுதியின் தற்போதைய வளர்ச்சி. எதிர்காலத்தில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு.

பழைய வீடு அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பை வாங்கப் போகிறீர்கள் என்றால்...

* வீடு அமைந்திருக்கும் இடம் மற்றும் பகுதி. வீடு அமைந்திருக்கும் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் அபாயம் போன்றவை உள்ளதா என்று விசாரித்து அறிதல்.

* வீட்டு உரிமையாளர் பற்றிய விவரங்களை அறிதல்.

* குறிப்பிட்ட சொத்தில் ஏதும் வில்லங்கம் உள்ளதா என்று பார்த்தல்.

* வீடு எத்தனை ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்ற விவரம்.

* வீட்டின் நடப்பு கட்டுமானத் தரம்.

* தற்போதைய உரிமையாளர் ஏன் வீட்டை விற்கிறார் என்ற விவரம்.

* மின் இணைப்புத் திறன் எவ்வளவு என்று அறிதல்.

* உங்களின் தேவைக்கு ஏற்ப வீட்டு அளவு உள்ளதா என்று பார்த்தல்.

* நம்மால் எந்த முறையில் பணத்தைச் செலுத்த முடியும் என்று தெரிவித்து, அதற்கு உரிமையாளர் ஒப்புக்கொள்கிறாரா என்று அறிதல்.

* குறிப்பிட்ட வீட்டுக்கு வங்கிக் கடன் பெற முடியுமா என்று தெரிந்துகொள்ளுதல்.

பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனிவீடுகள், மனைகளின் விலை பட்டம் போல சாதாரண மக்களின் கைகளுக்கு எட்டாமல் பறந்து கொண்டிருக்கிறது. மாநகரத்தில் நமக்கெல்லாம் சொந்த வீடு என்பது எட்டாக்கனிதான் போலும் என்று சம்பளக்காரர்கள், நடுத்தர வருவாய் உள்ளோர் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதலாக, டாடா போன்ற பெரும் நிறுவனங்கள் பட்ஜெட் வீடுகளைக் கட்டும் பணியில் பெருமளவில் இறங்கப் போகின்றன என்ற செய்திகள் காதில் இனிப்பாய் விழுந்தன. பெரும் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஆடம்பரக் குடியிருப்புகளை உருவாக்கிவிட்டு அவற்றை விற்பதில் திணறிவரும் மற்ற `டெவலப்பர்களும்' பட்ஜெட் வீடு கட்டுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர் என்பதே புதிய தகவல். `முதல் வீடு' முயற்சியில் இருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

No comments:

Post a Comment