06 July 2009

லிவ்விங் டுகெதர் - ரிலேஷன்ஷீப்


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. இதேபோல், `பணமும் மிஞ்சினால் வாழ்க்கையே போச்சு' என்று புதுமொழியை உருவாக்கலாம் போலும்!

அதுபற்றிதான் நாம் இங்கே விரிவாக பார்க்க போகிறோம்...

நிஷாந்தினிக்கு வயது 24. சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். பலர் ஒரு வரு டம் முழுவதும் வேலை செய்து பெறும் சம்பளத்தை ஒரு சில மாதத்தில் பெறுகிறாள்.

இவளுடன் பணிபுரியும் அசோக்குக்கும் அவளை போலவே கைநிறைய சம்பளம் அவ னுக்கு!

நிஷாந் தினிக்கு தாய்மொழி தமிழ். அசோக்குக்கு தாய்மொழி கன்னடம். என்றாலும் இருவரும் பெரும்பாலும் பேசிக்கொள்ளும் ஒரே மொழி ஆங்கிலம்தான்.

இருவருக்கும் ஒருவரையொருவர் நன்றாக பிடித்துப்போய்விட, சேர்ந்து வாழ ஆசைப் பட்டார்கள். திருமணத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால், `எவ்வளவு நாட்களுக்கு நாம் இருவரும் ஒத்துப்போகிறோமோ அதுவரை சேர்ந்து வாழ்வோம். அதன் பிறகு பிரிந்துவிடுவோம்' என்று முடிவெடுத்தனர்.

ஆம்! அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை `லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷீப்' என்கிற கணவன்-மனைவி போன்று தாலி கட்டாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை! இந்த வாழ்க் கையில் `போர்' அடித்துவிட்டால் உடனே பிரிந்து சென்றுவிடுவது என்றும் `அக்ரிமென்ட்' போட்டுக்கொண்டனர்.

இதையடுத்து சென்னையிலேயே பல லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட்டை வாங்கினார்கள். அந்த வீட்டில் அசோக் குடியேறினான். பெற்றோருடன் வசித்து வந்த நிஷாந்தினி அடிக் கடி அங்கு வந்து சென்றாள். நைட் டியுட்டி, ஓவர் டியுட்டி, பார்ட்டி என்று பல காரணங் களைக் கூறிக்கொண்டு, அசோக்குடன் குடித்தனம் நடத்தினாள்.

மாதம்தோறும் பெற்றோர் கையில் சுமார் 20 - 30 ஆயிரம் ரூபாய் வரை அவள் கொடுத்து விடுவதால், அவர்கள் மகள் எங்கே போகிறாள்? என்னவெல்லாம் செய் கிறாள்? என்பதை எல்லாம் கண்டு கொள் ளவே இல்லை.

`லிவ்விங் டுகெதர்' வாழ்க்கையில் கண வன்-மனைவியர் போலவே இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டனர். பார்க், பீச், தியேட்டர், டிஸ்கொதே என்று சுற்றினர். மொத்தத்தில், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று சொல்வார்களே. எப்பேர்ப்பட்ட அனு பவ பழமொழி அது?

இவர்களுக்கும் அந்த வாழ்க்கை போர் அடித்தது. எத்தனை நாளைக்குத்தான் நீ என்னையும், நான் உன்னையும் பார்த்துக் கொண்டிருப்பது? என்று பலவாறு யோசித்தனர்.

ஒருநாள் இறுதியான - உறுதியான முடிவு எடுக்க கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு இருவரும் போனார்கள். ஒரு நேர சாப்பாட்டுக்காக சில ஆயிரங்கள் செலவு செய்து சாப்பிட்டனர். சிறிது நேரம் கடற்கரைக் காற்றை சுவாசித்தனர்.

அப்போது -

"அசோக்! எனக்கு வாழ்க்கை போர் அடித்துவிட்டது. நாம் பிரிந்துவிடுவோம். இன்றுடன் நம் அக்ரிமென்ட் முடிந்துவிட்டது. நீ உன் வழியே போ. நான் என் வழியே போகிறேன். நேருக்கு நேராக சந்திக்க நேரிட்டால் `ஹாய்' என்று மட்டும் சொல்லிவிட்டு போய் விடுவோம்'' என்றாள் நிஷாந்தினி.

அவளது இந்த பேச்சு அசோக்கை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

"நானும் இதைத்தான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதை நீ யே சொல்லிவிட்டாய்'' என்றான் சிரித்துக்கொண்டே!

அடுத்த நிமிடமே அந்த ரிசார்ட்டை விட்டு இருவரும் வெளியேறினார்கள். அசோக் ஒரு காரில் ஏற, நிஷாந்தினி இன்னொரு காரில் ஏறினாள். இருவரும் வெவ்வேறு திசையை நோக்கி பயணமானார்கள். இருவரது லிவ்விங் டுகெதர் வாழ்க்கையும் அதோடு முடிந்து போயிற்று.

இது என்ன வாழ்க்கை? இப்படியெல்லாமா வாழ்கிறார்கள்? என்று உங்களில் பலர் யோசிக்கலாம்.

நம் சிங்காரச் சென்னையில் இந்த வகை வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வாழ்க்கை வாழ்பவர்கள் எல்லோரும் மேல்தட்டு வர்க்கத்தினர். பணத்தை அளவுக்கு அதிகமாக கையில் வைத்துக்கொண்டு, அதை என்ன செய்வது என்று தெரியாமல் இன்ப தவிப்பு தவிப்பவர்கள்.

இவர்கள், ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால், நகரில் எந்த ஓட்டல் காஸ்ட்லியான ஓட்டலோ அங்குதான் செல்கிறார்கள். அங்கே எந்த டிபன் அல்லது சாப்பாடு விலை அதிகமோ அதை மாத்திரமே ஆர்டர் செய்கிறார்கள்.

ஆடை அணிவதிலும் இப்படித்தான். விலை உயர்ந்த ஆடையை வாங்கி அணிகிறார்கள். சில நாட்களில் அந்த காஸ்ட்லியான ஆடை `போர்' அடித்துவிட, அதை ஓரம் கட்டி விடுகிறார்கள்.

அதேபோல், திருமண வாழ்க்கையும் `போர்' அடிக்கும் என்று எண்ணுகிறார்கள். எத்தனை காலத்திற்குதான் துணையுடன் மட்டுமே வாழ்வது என்று யோசிக்கிறார்கள். அதனால், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். எப்போது அந்த வாழ்க்கை `போர்' அடிக்கிறதோ, அடுத்த நிமிடமே சந்தோஷத்துடன் பிரிந்து விடுகிறார்கள்.

பிரிந்தவர்கள் வேறு ஒரு தகுதி யான துணையை தேடிக் கொள்கின் றனர். மீண்டும் இதுபோன்ற வாழ்க் கையையும் தொடர்கின்றனர். அப் போதும் போர் அடிக்கும். அப்புறம் என்ன? மறுபடியும் பிரிவது, அதன்பின் வேறு ஒருவருடன் ஒட்டுவது.

இந்த வாழ்க்கையில் சிலநேரங்களில் சோக நிகழ்வுகளும் ஏற்பட்டு விடுவது உண்டு. அதாவது, ஒரு ஜோடி இப்படி சேர்ந்து வாழ்ந்து வரும்போது, அவர் களில் ஒருவர் வேறு ஒருவருடன் திடீ ரென்று உறவை ஏற்படுத்திக் கொள் வது அவரது துணையை கடுமையாக பாதித்து விடுகிறது. அப்போது, அந்த துணை தற்கொலை முடிவை கூட அவசரப்பட்டு எடுத்து விடுவதும் உண்டு. இன்னும் சிலரோ, அதை `கூலாக' எடுத்துக்கொண்டு, அடுத்த துணையைத் தேட தயாராகி விடு கிறார்கள்.

சரி... இதையெல்லாம் அவர்களது பெற்றோர் கண்டுகொள்ளவே மாட்டார்களா? என்று நீங்கள் கேட்கலாம்.

பெரும்பாலும் கேட்க மாட்டார்களாம். காரணம், பணம்.

கைநிறைய சம்பாதிக்கும் மகனோ அல்லது மகளோ, அந்த பணத்தில் கணிசமான தொகையை பெற்றோரிடம் கொடுத்துவிடும்போது, அந்த பெற்றோர் வாய்மூடி மவுனிகளாகவே மாறிவிடுகிறார்கள். பிள்ளைகள் மெத்த படித்தவர்கள், நிறைய அறிவு கொண்டவர்கள், எது நல்லது? எது கெட்டது? என்பது நன்றாகவே தெரியும் என்ற நம்பிக்கையில், அவர்களது போக்கை கண்டுகொள்வதும் இல்லை.

பிள்ளையே வந்து, `எனக்கு திருமணம் செய்து வையுங்கள்' என்றால், திருமணம் செய்து வைக்கிறார்கள். கேட்கவில்லை என்றால், அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

"இப்படி வாழும் வாழ்க்கை நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராது. அது, தேவை இல்லாத தும்கூட! அதையும் மீறி, இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைய கிடைப்பதுபோல் இருக்கும். ஆனால், உண்மையான மகிழ்ச்சியை மறைமுகமாக இழந்து கொண்டே இருப்பார்கள்'' என்று எச்சரிக்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

பெங்களூர், மும்பை நகரங்களில் திருமணம் செய்து கொள்ளாமல் சந்தோஷத்திற்காக மட்டும் குடும்பம் நடத்துபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மேல்நாட்டினரைப் பார்த்து வந்த இந்த வாழ்க்கை இப்போது நம் சென்னையிலும் வளர்ந்து வருவது கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஐடி துறையை சார்த்தவர்கள் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவது இயலாது. சென்னையை பொறுத்தவரை ஐடி துறையை காட்டிலும் மீடியா துறையை சார்த்தவர்கள்தான் இதுபோன்ற வாழ்க்கையை அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

3 comments:

இங்கிலீஷ்காரன் said...

ஐடி துறையை சார்த்தவர்கள் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவது இயலாது. சென்னையை பொறுத்தவரை ஐடி துறையை காட்டிலும் மீடியா துறையை சார்த்தவர்கள்தான் இதுபோன்ற வாழ்க்கையை அதிகம் தேர்வு செய்கிறார்கள்.//

நெத்தி அடி...

இங்கிலீஷ்காரன் said...

நாமெல்லாம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்பதை நினைவு படுத்தும் இடுகை சகா இது.

JesusJoseph said...

ஐடி துறையை சார்த்தவர்கள் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவது இயலாது. சென்னையை பொறுத்தவரை ஐடி துறையை காட்டிலும் மீடியா துறையை சார்த்தவர்கள்தான் இதுபோன்ற வாழ்க்கையை அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

thanks for this comments

Post a Comment