
(28.06.09), சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில், கணினித்துறையைச் சேர்ந்த இளையோர்களை உள்ளடக்கிய SAVE TAMIL என்னும் குழுவால் முன்னெடுக்கப்பட்ட " இலங்கையில் தற்போதைய நிலை" என்று தலைபிடப்பட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய அனைவரும் அகதி முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்களின் வாழ்வு கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக்காட்டி, வருங்காலத்தில் தமிழகத் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளை மேற்கோளிட்டு பேசினார்.
இக்கருத்தரங்கில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டதாகத் தெரிகிறது.கருத்தரங்கில், விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் தி.க), அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (நிறுவனர், தமிழ் மையம், சென்னை), திரு. அருள் ஜோர்ஜ் (PUCL), திரு. சகாயம் (தமிழக மீனவர்களின் சார்பாக), செல்வி. பூங்குழலி (எழுத்தாளர்) ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்கருத்தரங்கில் நிழற்படக் கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
No comments:
Post a Comment