
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
யுத்த சூனிய பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அராசங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் றொபர்ட் வூட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணைத் தலைமை நாடுகள் உள்ளிட்ட உலக சமூகம் போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்தும் அவதியுறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment