Pages

21 April 2009

நிரந்தர போர் நிறுத்தம் கோரி 23ல் பொதுவேலைநிறுத்தம்::கலைஞர்


இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘’இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்’’ என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமா
23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறியுள்ளார்.

அவசர த‌ந்தி

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்குமாறு வலியுறுத்தி, முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளார். இலங்கையில் போர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், போரை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தந்தியில் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாபுக்கும் அவசர த‌ந்தி அனுப்பியுள்ளார்.

3 comments:

iskcon said...

தமிழக மக்களை ஏமாற்ற தமிழக முதல்வரின் ஏமாற்றுவேலை > தமிழகத்தில் இந்த மாதம் 23 தேதி பொது வேலை நிறுத்தம்

Anonymous said...

IVANGA IPPADITHTHAAN ,
KADITHAM PODUVANGA
THANTHI ADIPPANGA
ARIKKAI VIDUVAANGA
PHONE POTTU
SONIA AKKA, MANMOHAN THATHA,
KOODA PESUVAANGA
STRIKE NU ARIKKAI VIDUVAANGA
ITHAIYETHAAN VARISAI MAATHI MAATHI
SEIVAANGA.

ONNUM KANDUKKATHEENGA BOSS.
AANA ONNU, NAMMA RAJABKSE ANNAN
SONNATHU POLA INDHIAVUKKU NANRI,
IVANGALAIP PATHIYUM INTHIYAVAIP
PATHIYUM THERIYA VACHATHUKKU.

Anonymous said...

வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்து விட்டார் பெரியவர்....அவருக்கு தமிழகத்தில் உள்ள மக்களைப் பார்தால் கேன பூனாவா தெரியும்னு நெனைக்கிறேன்...இல்லேன்னா போர் உக்ரமான இந்தா நேரத்லையும் முழு அடைப்புக்கு அரை கூவல் விடுவாரா?....அங்கே குருவிகளைப் போல மக்கள் கூட்டம் கூட்டமாக செத்து கொண்டிருக்கிறார்கள்...இங்கே முழு அடைப்பாம்..என்னங்கடா காமெடி பண்றீங்க...எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க இப்டி?
அவ்ளோ இன உணர்வு பொத்து கிட்டு வண்ட அன்னைக்கே நே முழு அதிகாரத்தயும் பயன் படுத்தி இருக்கலாமே....கப்பல் துறையை வாங்க சண்டை போட்ட அளவுக்கு கூட நி சண்ட போடலையே'பா.......உன் கபட நாடகதுக்கெல்லாம் நாங்கள் ஆடியது அந்த காலம்.......உனக்கு வேண்டுமானால் மனசாட்சி பற்றி தெரியாமல் இருக்கலாம்....நாங்கள் அப்டி அல்ல....எங்கள் மனசாட்சி கொல்கிறது எங்களை......இப்படி ஒரு குற்ற உணர்வுக்கு எங்களை ஆளாகி நித்தமும் சாகடித்து கொண்டிருக்கிறாய் தோழனே........போதும் விளையாட்டு.....உன் கொள்ளு பேரர்களும் இந்தா தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற உன்னுடைய சின்ன ஆசையை பணம் வாங்கி ஒட்டு போடா கற்று கொண்ட சராசரி கண்டிப்பா நிறைவேற்றுவான்........சந்தோசமாக இரு.....

Post a Comment