Pages

30 March 2009

Breaking News: லாகூர் தீவிரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில், காவலர் பயிற்சிப் பள்ளி மீது இன்று காலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர், 150க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

பாகிஸ்தான் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பல போலீசார் பலியானார்கள். ஏழு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அரசு, பாகிஸ்தானில் வட மேற்கு எல்லை பகுதியில் இருக்கும் தாலிபான் மற்றும் அல் கொய்தா முகாம்களை முற்றிலுமாக ஒழிக்குமாறு பாகிஸ்தானை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

இதற்கு ஓரளவு தலையசைக்கும் பாகிஸ்தான் அரசு மீது இந்த தீவிரவாத கும்பல் கடும் கோபத்தில் இருப்பதால் தொடர்ந்து பாகிஸ்தானில் வெறியாட்டம் நிகழ்த்தி வருகிறது.

இச்சம்பவத்தையடுத்து இந்திய எல்லையோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியதாவது, பயங்கரவாதிகளை உயிருடன் பிடிப்போம். இந்த தாக்குதல் பாக்கிஸ்தான் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இச்சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்

No comments:

Post a Comment