Pages

06 March 2009

தேர்தலில் போட்டியிடுவேன்! -சீமான் பேட்டி

சினிமாதுறையில் இருப்பவர்கள் தங்கள் உழைப் பின் மூலமாக பொழுதுபோக்கு-கேளிக்கைகள் என சொகுசாக இருக்கிறார்கள். நீங்கள் போராட்டம், அதிதீவிரப் பேச்சு என செயல்பட்டு இப்படி சிறையில் கஷ்டப்படு கிறீர்களே?

சீமான்: என் சொந்த ரத்தங்கள் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருக்கும்போது, சொகுசு வாழ்க்கை என்ன வேண்டிக்கிடக்குது!

சிறையில் தனிமையாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சீமான்: வெளியில் இருந்து கையா லாகாத்தனமாக இருப்பதைவிட, உரிமைபேசி கம்பிக்கு பின்னால் இருப்பதே மேல்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி அரசால் கைது செய்யப்பட்ட உங்கள் மீது இப்போது தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட் டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதே?

சீமான்: என்னை சிறைப் படுத்த வேண்டும் என முடிவு செய்தபிறகு, அது என்ன சட்டமானால் என்ன? அரசு அதன் கடமையைச் செய்கிறது. நான் என் கடமையைச் செய்கிறேன். இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் இருக்குமளவிற்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்பதுதான் உண்மை. விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் அனைத்து பத்திரிகைகளும் வார இதழ்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன. அதையே நான் மேடையில் பேசினால், அதைப் பொறுக்க முடியாமல் என்னைச் சிறைப்படுத்துகிறார்கள். இதுதான் இங்குள்ள பேச்சு சுதந்திரம்!

ஒவ்வொரு மேடையிலும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பேசிவந்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் சொந்த தொகுதியான சிவ கங்கையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன? ப.சியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களா?

சீமான்: தேர்தல் குறித்து நான் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. அது பற்றி என் தமிழ் உறவுகளும், என் பின்னால் இருக்கும் பெரிய மனிதர்களும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் முடிவு செய்தால் போட்டி யிடுவேன். சிறைக்குள் இந்த சீமானை பிடித்துப் போட்டுவிட்டால் பயந்து முடங்கி விடமாட்டான். எங்கு இருந்தாலும் என் குரல் ஒலிக்கும். என் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேரும்.

-காசி

நன்றி நக்கீரன்

3 comments:

Anonymous said...

சீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா?

தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் தேறுமா? சும்மா பிலிம் காட்டி கொண்டிருக்கிறார்.

Anonymous said...

டேய்ய் விவேக்
சீமான் ரெண்டு வருடத்துக்கு முன்னாடி பூஜா மடியில் படுத்தாரா இல்ல உங்க அக்கா மடியில படுத்தாரா எனக்கு தெரியாது . ஆனா தன் இனம் அழிகிறதே என்ற ஏக்கத்தில் கதறுகிறார் அந்த ஒண்ணுக்காகவே அவருக்கு வோட்டு மட்டுமல்ல என்றென்றும் எங்கள் நெஞ்சில் பூத்திருக்கும் அவர் நினைவுகள்.

nusail said...

Nalla Sonnike அன்பில்

Post a Comment