Pages

25 February 2009

தமிழக அரசின் கலைமாமணி விருது

கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிவரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு விருதுக்குரியவர்களை இயல், இசை, நாடக மன்றம் பரிந்துரைத்து முதல்வருக்கு அனுப்பியது.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விருது பெறுவோர்:

முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், வயலின் எம்பார் கண்ணன், டிரம்ஸ் சிவமணி, பேச்சாளர் சுகி சிவம், பாடகர் வீரமணி ராஜூ, பரத நாட்டியக் கலைஞர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வசந்தா வைகுந்த், நாடக தயாரிப்பாளர் கூத்துப்பட்டறை முத்துசாமி ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.திரைப்படத்துறையில் அபிராமி ராமநாதன், நடிகர்கள் சேரன், சுந்தர்.சி, பசுபதி, பரத், வையாபுரி, நடிகைகள் அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ÷ஷாபனா, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வசனகர்த்தா வேதம் புதிது கண்ணன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சின்னத்திரையில் இயக்குனர்கள் சுந்தர் கே.விஜயன், திருச்செல்வன், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, நடிகர் அபிஷேக், நடிகைகள் அனுஹாசன், தேவிப்பிரியா, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்படுகிறது.பரத நாட்டியக் கலைஞர் ஜாஹீர் உசேன், அறிவிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி உள்ளிட்ட 71 பேர் ‘கலைமாமணி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடகப் பாடலாசிரியர் மதுரை வரதராசன், புரவியாட்டக் கலைஞர் சென்னை சுந்தரமூர்த்தி, நாடக நடிகர் சென்னை டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் பொற்கிழி பெறுகின்றனர். சிறந்த நாடகக் குழுவாக ஆடுதுறை சாம்புவின் ஸ்ரீ சங்கர நாராயண சபா, கலைச் செல்வம் மற்றும் சிறந்த கலை நிறுவனமாக திருவையாறு தமிழிசை மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

[

No comments:

Post a Comment