Pages

04 January 2009

Ghajini Video Game கஜினி கேம்


தமிழில் மற்றும் தெலுங்கு வெற்றி பெற்று இந்தியில் எடுத்துள்ள கஜினி இப்போது குழந்தைகளை குஷி படுத்துவதற்கு விளையாட்டு வடிவத்தில் வந்து உள்ளது.

கஜினி என்ற பெயரில் அமீர்கானை மையமாகக் கொண்ட கம்ப்யூட்டர் கேம் ஒன்று வெளியாகி உள்ளது. முதலில் இந்த கேம் கஜினி ரிலீசாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்த விளையாட்டை மேலும் செம்மைப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் நோக்கத்துடன் இதன் அறிமுகம் தாமதப்படுத்தப்பட்டதாக கஜினி படத்தின் தயாரிப்பாளர் மது மண்டேனா தெரிவித்தார்.

எப்எக்ஸ் லேப் (FX Lab) தலைவர் சசி ரெட்டி மற்றும் கஜினி தயாரிப்பாளர் மது மண்டேனா ஆகியோர் இணைந்து 3 கோடி ரூபாய் செலவில் இந்த கஜினி விளையாட்டை உருவாக்கியுள்ளனர்.

கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்டுள்ள கஜினி வேடத்தில் காணப்படும் அமீர்கான் பொம்மை வில்லன்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்பது போல இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அமீர்கான் நடித்த கஜினி திரைப்படம் வெளியான முதல் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment