Pages

26 May 2009

மின் கட்டணத்தை இனி வங்கி ஏ.டி.எம்.களிலும் கட்டலாம்

வங்கி ஏ.டி.எம்.கள் மூலமாக மின்சார கட்டணம் செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னையில் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த உள்ளது.

மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி 2 நாட்களில், மின்வாரிய அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிவதை காணமுடியும். இதுபோன்ற நெரிசல்களை தவிர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சமீபத்தில், ஆன்-லைனில் (இன்டர்நெட் மூலமாக) மின்சார கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, இயந்திரங்கள் மூலமாக 24 மணி நேரமும் மின்சாரம் செலுத்தும் வசதியும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, வங்கிகளின் தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள் (ஏ.டி.எம்.கள்) மூலமாகவும், மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தினை மின்சார வாரியம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை அடுத்த மாதத்தில் சென்னையில் அறிமுகம் செய்யவுள்ளோம் என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்

No comments:

Post a Comment