கோலாலம்பூரில் 88-மாடி பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்துக்கு அருகில் புதிதாக 65-மாடிக் கட்டிடம் ஒன்று உருவாகப் போகிறது என்று செய்தியறிக்கை ஒன்று கூறுகிறது.
ஒரு தங்கு விடுதி, அடுக்குமாடி வீடுகள், பொருள் விற்பனை பேரங்காடி முதலியவற்றைக் கொண்ட அக்கட்டிடம் 2012-இல் கட்டி முடிக்கப்படும் என்று அதனை உருவாக்கி வரும் நிறுவனத்தைச் சேர்ந்த சைட் யுசூப் சைட் நசிர், த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டிடம் கூறினார்.
போர் சீசன்ஸ் பிலேஸ் (Four Seasons Place) என்னும் பெயரில் அமையும் அக்கட்டிடத்தை சைட் நசிர், மலேசிய செல்வந்தர்களில் ஒருவரான ஒங் பெங் செங், சிலாங்கூர் சுல்தான் ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஒரு நிறுவனம் உருவாக்கி வருவதாக அந்நாளேடு கூறிற்று.
அதில் உள்ள 140 அடுக்குமாடிகள், ஒரு சதுர அடிக்கு ரிம 2,500 என்ற விலையில் விற்கப்படும் என்று அது மேலும் கூறியது.
அதன் அருகில் உள்ள 452 மீட்டர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்,தைவானில் 509 மீட்டர் உயரம் கொண்ட தைப்பே 101 கோபுரம் உருவாகும்வரை உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகத் திகழ்ந்தது.
-AFP
No comments:
Post a Comment