புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக சீமான் பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தது என்று கூறி அவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். தற்போது புதுச்சேரி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
முதல் வகுப்பு அறையில் இருக்கும் சீமான் சிறை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி செய்யவும் தன்னை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறி தற்போது உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
முதல் வகுப்பு சிறையில் இருப்பதால் அவருக்கு வெளியில் இருந்து வரும் உணவைச் சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாள்தோரும் பெரியார் திராவிட கழக தலைவர் லோகு ஐயப்பன் வீட்டிலிருந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியமும், இரவும் உணவு வேண்டாம் என்று அவர் திருப்பி அனுப்பிவிட்டார். சிறை வளாகத்துக்குள் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment