டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தினேன். இருவரும் ஆவன செய்வதாகக் கூறினார்கள்.
பின்னர் இந்திய வெளியுறவுச் செயலர் எம்.கே.நாராயணனிடம் இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலை பற்றி விரிவாகக் கூறினேன். நிச்சயமாக போரை நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என் நம்பிக்கையை சுக்குநூறாக்கி விட்டது. இலங்கையில் புதிய மின் திட்டங்களுக்கும், போரில் சிதைவடைந்த பகுதிகளைச் சீரமைக்கவும் உதவி அளிப்போம் என்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தபோது ‘இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், இலங்கை ராணுவத் தளபதியும் சேர்ந்து ராணுவ ஆட்சி அமைக்க சதி செய்கிறார்கள்’ என்ற தகவலைக் கூறியபோது, சோனியா ‘இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் நாம் எப்படித் தலையிட முடியும்’ என்று கூறி விட்டார். எனவே, மிகுந்த மனவேதனையுடன் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, இலங்கைப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பா.ம.க உறுப்பினர்கள் நாளை (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Post a Comment